• (+94) 362234844
  • talduwamuslimmv@gmail.com
  • Register
  • Login
previous arrow
next arrow
PlayPause
Slider

                                                                              

Message from the Principal 

நான் இப்பாடசாலையில் 2010.10.18 ம் திகதி முதல் அதிபராக கடமை புரிகின்றேன் இக்காலப்பகுதியில் அல்லாஹ்வின் உதவியால் பாடசாலையின் நிறைய மாற்றங்களை செய்வதற்கு  என்னோடு ஆசிரியர்கள், பெற்றார்கள், பழைய மாணவர்கள், நலன் விரும்பிகள், என  பலரும் சேர்ந்து  செயல்பட்டனர். அதனால் நாம் எமது பாடசாலையில் பல புதிய திருந்த்தங்களை மேற்கொண்டோம். 

Vision

நோக்கு

உண்மையால் உலகை வெல்வோம்

முயற்சியால் விண்ணைத் தொடுவோம்

 

Mission

பணிக்கூற்று

முயற்சியை செயலில் காட்டி – கற்றற்

சூழலை ,ரம்மியமாக

சமயத்தை வாழ்வாக்கி

மனப்பாங்கை விருத்தியாக்கி

மாணாக்கரை குணத்தின் சிகரம் ஆக்கி

குற்றமில்லாத அறிவை ஊட்டி அர்ப்பணிப்பை துணையாக்கி

உண்மையால் உலகை வென்று

விண்ணிலே தடம் பதிப்போம்

 

 

Card image cap 29 Jun2022
ICT CLUB WORK SHOP


எதிர்வரும் வெள்ளிக்கிழமை [2022.07.01] அன்று காலை 8.00-11.00 வரை தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப கழகத்திற்கு புதிதாக சேர்த்து கொள்ளப்பட்ட அங்கத்தவர்களுக்கான கருத்தரங்கு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுDP EDUCATION நிறுவனத்தில் பணிபுரிகின்ற M.N.M. NIFRAN அவர்களின் தலைமையில் இக்கருத்தரங்கு நடத்தப்படவுள்ளது.

Card image cap 27 Jun2022
வரலாற்றுச் சாதனையுடன் மற்றுமொரு வெற்றி

 

தெஹியோவிட்ட வலய மட்ட விளையாட்டுப் போட்டிகள் நேற்றும் ருவன்வெல்லையில் நடைபெற்றது. இதில் எமது பாடசாலயான தல்துவை முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் இருந்து 17 வயதின் கீழ் ஆண்களுக்கான 100 M தடைதாண்டல் போட்டியில் M. H. M. ஹனீக் கலந்து கொண்டு முதலிடம் பெற்றார்.

இவர் இந்த தூரத்தை 16.2 செக்கன்களில் ஓடி வலய மட்ட புதிய சாதனையை ஏற்படுத்தியமை குறிப்பிடத் தக்கது. இவர் இவரது இச்சாதனை மூலம் தனது பாடசாலைக்கு புகழ் சேர்த்துள்ளார்.

இவருக்கும் இவரது வெற்றிக்கும் பங்களிப்புச் செய்த சகலருக்கும் அதிபர் உட்பட பாடசாலை நிர்வாகம் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதோடு
தொடர்ந்தும்
வெற்றிகள் பெற்றிடவும்
சாதனைகள் புரிந்திடவும்
வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது.

Card image cap 21 Jun2022
DP Education நிறுவனத்தினால் வழங்கப்பட்ட SMART CLASSROOM சாதனங்கள்


2022/06/20 திகதியன்று எமது பாடசாலைக்கு DP EDUCATION நிறுவனத்தினால் தொழிநுட்ப வசதியுள்ளவகுப்பறையொன்று (SMARTCLASSROOM) சாதனங்கள்

Card image cap 01 Feb2022
இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்

இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்