எழில் மிகு மலைக்குன்றுகளாலும் சிறிய கிளை அருவிகளாலும் சூழப்பட்ட எளிமையான கிராமமே தல்துவை ஆகும்.இங்கு வாழ்ந்த நமது முன்னோர்கள் தமது பிள்ளைகள் சிறந்த நல்லொழுக்கம், அதேவேளை கல்வியாலும் செல்வத்தாலும் சிறந்து விளங்க வேண்டும் என்ற எண்ணத்திலும் ஒர் கல்விக் கலையத்தை ஆரம்பிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.. அந்த வகையில் நமது கலையகம் 1952.10.20 ஆம் திகதி பிலவத்த எனும் இடத்தில் 12 மாணவர்களுடன் ஆரம்பமாகியது . பாடசாலைக்கு முஹம்மது சரிபு என்பவர் காணி தந்து உதவினார்.
இதன் முதலதிபர் S.வினாசித்தம்பி என்பவராவார். அப்போதைய பாடசாலையில் வகுப்புப்பிரிவுகள் இல்லை. எல்லா மாணவர்களும் ஒரே வகுப்பில் கல்வி கற்றனர். அத்தோடு தமிமும் எழுத்தும் வாசிப்பும் எளிய கணிதமும் கற்பிக்கப்பட்டன.
காலம் செல்லச் செல்ல மாணவர்கள் அதிகரித்ததால் இடப்பிரச்சனை ஏற்பட்டது. பின் பாடசாலை தற்போதய இடத்திற்கு இடம் மாற்றப்பட்டது. 1996 ஆம் ஆண்டு இப்பாடசாலை மாணவர்கள் முதன்முதலாக க.பொ.த சாதாரண தர பரிட்சைக்கு தோன்றினர். பின்பு 2005இல் முதன்முதலாக உயர்தர வகுப்பு ஆரம்பிக்கப்பட்டது. 1952 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட எமது பாடசாலைக்கு இன்றைக்கு 69 வயதாகிறது.அன்று முதல் இன்று வரை 15 அதிபர்ளை இப்பாடசாலை கண்டுள்ளது.
கடந்த காலங்களில் இடைக்கிடையே பல சாதனைகளை படைத்தாலும் 2010 ஆம் ஆண்டு பின் ஏற்பட்ட துரித வளர்ச்சி மெச்சத்தக்கது . அது இன்றைய பொற்காலமாகும்.இவ் வளர்ச்சிக்கு பிரதான பங்கு தற்போதைய கலையக அதிபர் கௌரவ டி.எஸ்.எம்.என்.அவுன் அவர்களையே சாரும்.
உண்மையிலேயே இன்று நம் கலையகம் வலையத்திலேயே தலைசிறந்து விளங்குகின்றது.கல்வி,விளையாட்டு,ஓழுக்கம் மற்றும் இணைப்பாடவிதானச் செயற்பாடுகளிலும் எமது மாணவர்கள் பங்கு கொண்டு வெற்றி ஈட்டுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.