Principal Message
நான் இப்பாடசாலையில் 2010.10.18 ம் திகதி முதல் அதிபராக கடமை புரிகின்றேன் இக்காலப்பகுதியில் அல்லாஹ்வின் உதவியால் பாடசாலையின் நிறைய மாற்றங்களை செய்வதற்கு என்னோடு ஆசிரியர்கள், பெற்றார்கள், பழைய மாணவர்கள், நலன் விரும்பிகள், என பலரும் சேர்ந்து செயல்பட்டனர். அதனால் நாம் எமது பாடசாலையில் பல புதிய திருந்த்தங்களை மேற்ற்கொண்டோம்.
D.M.S.M. AVUINஅதிபர் தல்துவை முஸ்லிம் மஹா வித்தியாலயம்
புலமை பரிசில் பரீட்சை, க.பொ.சாதாரண தரம், க.பொ.த உயர்தரம் ஆகிய பிரதான பரீட்சைகளின் பெறுபேறுகளை மேம்படுத்த முடிந்தது.அதே போல் பாடசாலையின் பௌதீக வளங்களையும் பலரின் உதவியினால் பெற்றுக்கொண்டோம். “சிறு முயற்சி பல வெற்றி தரும் ” அதன் படி நாம் சிறு சிறு முயற்சிகளால் பெரிய வெற்றிகளை தம்வசமாக்கிக் கொண்டோம் .
அரசியல் தலைவர்கள், மாகான கல்வி அமைச்சு, மாகான கல்வி திணைக்களம், வலய கல்வி காரியாலயம் , பிரதேச செயலகம் ஊடாக பல பௌதீக வளங்களையும் பெற்றுக்கொள்ள முடிந்தது.
நாம் செய்யும் பணி ஏகநாயகனின் அருளால் எமது எதிர்கால சமூகத்தினை வளம் பெற செய்து அவர்களை தேசப்பற்றுள்ள நல்ல மனப்பாங்குடைய நற்பிரஜையாக மாற்ற எமக்கு உதவியாய் அமைய வேண்டும் என பிரார்த்திக்கிறேன்.
எமது இவ் வளர்ச்சி பாதையில் புதிய ஒரு முயற்சியாக உருவாக்கபடும் இவ் இணையத்தள வடிவமைப்பு செயற்பாடு தொடர்பாக நான் பேரு மகிழ்ச்சி அடைகின்றேன் . இச்செயட்பாட்டினை மேற்கொண்ட கணனிகழக மாணவர்களுக்கும் தொழிநுட்ப பாட ஆசிரியைக்கும் முதற்கண் நன்றிகளை தெரிவித்து கொள்கின்றேன் .இம்முயற்சியானது வெற்றிகரமாக அமைய இறைவனிடம் பிரார்த்திக்கின்றேன் .