• (+94) 362234844
  • talduwamuslimmv@gmail.com
  • Register
  • Login

ICT Club

நோக்குக்கூற்று

தொழிநுட்ப ரீதியான நவீன யுகத்திற்கு பழக்கப்பட்ட சமூகமொன்றை தோற்றுவிப்போம்

 

பணிக்கூற்று

புத்தாக்க திறன் கூடிய

சிந்தனா சக்தியை வளர்த்து

நவீன உலகிற்கு மாற்றமடைந்த

தொழிநுட்ப அறிவு படைத்த

சமூகமொன்றின் உருவாக்கத்திற்கு

இன்றே அடித்தளமிடுவோம்

 

எமது கல்லூரி மாணவர்கள் தகவல் தொடர்பாடல் கல்வி மற்றும் ஊடகத்துறையில் சிறந்து விளங்கினும் தமது ஆற்றல்களை வெளிக்காட்டும் வாய்ப்பு அற்றவர்களாக இருப்பதை உணர்ந்த கல்லூரி அதிபரும் தகவல் தொழிநுட்ப ஆசிரியையும் ஏனைய ஆசிரியர்களுமாக ஒன்றிணைந்து 2014 ஆம் ஆண்டளவில் ICT மற்றும் MEDIA CLUB எனும் பெயரில் கழகம் ஒன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. அப்படி ஏழு ஆண்டுகளுக்கு முன் விதைக்கப்பட்ட விதையே இன்று விருட்சமாய் ஓங்கி ஜொலிக்கின்றது.

இப்பயணத்தில் முதற்கட்ட நடவடிக்கையாக நேர்முக பரீட்சை ஒன்றின் மூலம் புத்தாக்க சிந்தனையுடன் கூடிய மாணவர் குலாம் ஒன்று தெரிவு செய்யப்பட்டது. ICT CLUB இன் வரலாற்றுப்பாதையில் தகவல் தொடர்பாடல் சம்பந்தமான கண்காட்சிகள், நேரலை தொலைக்காட்சி ஒலிபரப்பு, (ரூபவாகினி கூட்டுத்தாபனம், பாராளுமன்றம், கொழும்பு பல்கலைக்கழகம்) போன்ற சுற்றுலாக்கள் என பல்வேறு அடைவு மட்டங்களை கண்டுள்ளது.

இப்படியாக எத்தனை அடைவுகளை அடைந்தினும் சமகால இணையத்தள வடிவமைப்பு  கழக வரலாற்றின் பாரிய வெற்றிபடியை எட்டியுள்ளது.அதாவது இவ்வேளை திட்டத்திற்காக சகல அங்கத்தவர்களும் மாறா குறிக்கோளுடன் செயற்பட்டமை குறிப்பிடத்தக்க ஒரு விடயம் ஆகும்.

 

 

இலச்சினை:

 

எதிர்கால நடவடிக்கை :

  • புதிய அங்கத்தவர்களின் சேர்ப்பு.
  • மற்றைய சங்கங்களுடன் இணைந்து தேர்ந்தெடுத்த ஆக்கங்களை இணையதளத்தில் வெளியிடல்.
  • உல்லாச சுற்றுலா , பயிற்சி , கருத்தரங்கு போன்றவை நடைமுறைப்படுத்தல்.
  • பாடசாலை இணையத்தளத்தை புதுப்பிற்க தெரிவு செய்யப்பட மாணவர்களுக்கு பயிற்சி வழங்குதல்.

 

Teachers in Charge:

Miss. M.N.S.Ruheena   

 

 

Web Developing Team :

M.I.F. SALIHA

M.A.M.AKEEF

M.F.F.RIMZA

M.N.F.NAFILA

M.H.HUSNY AHAMED

N.M.N.NASRIN

F.N.ZAWATHA AFNANI